மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணி முடிந்த மெட்ரோ ரயில் திட்டங்களைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் காணொலியில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
புனே மெட்ரோ ரயில் திட்டத்தில் 8300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி முடிக்கப்பட்ட மூன்றாவது தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்தார். இந்தத் தடம் ஹிஞ்சேவாடி தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கும் சிவாஜிநகருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்தத் தடத்தில் ரயில்களை இயக்குபவர்கள் அனைவரும் பெண்களே. அது மட்டுமல்லாமல் இதற்குத் தேவையான மின்சாரத்தில் 30 விழுக்காடு சூரிய மின்னாற்றலால் ஈடுசெய்யப்படுகிறது.
புனே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் பல்வேறு தடங்களுக்கான 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.



