Advertisements

டெல்லி :
2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில், பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்புவதாக கூறினார். மேலும், 2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில், இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
Advertisements


