5 கோடி லஞ்சம்… தவெக அரசுக்கு நயினார் கேள்வி!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை லஞ்சம் தரத் தயாராக இருந்தவரை அடையாளம் காட்டுவதில் தவெக அரசுக்கு என்ன சிக்கல்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரேன் வினவியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை லஞ்சம் தரத் தயாராக இருந்தவர் குறித்து அமைச்சர் ராஜ்மோகன், புகார் அளித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

‘ஒரு ரூபாய் கூட இலஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதலமைச்சரே பொது மேடையில் கூறிய பிறகும் கூடக் கோடிக்கணக்கில் அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாகத் தெரிவித்தார். ஒருவேளை பேரம் படியாததால் தான் பொதுவெளியில் வந்து இப்படி அமைச்சர் புலம்புகிறாரோ? என்று விமர்சித்துள்ளார். மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *