ஈரான் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதலால்  ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் முயற்சித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கெஷ்ம் தீவு மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகச் சிறிய அளவிலானது என்றும் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான போரைத் தொடங்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இருப்பதாக மற்றவர்கள் கருதக் கூடாது என்பதற்காகவே, இந்தத் தாக்குதல்கள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *