திமுக பங்கேற்கவில்லை… காங்கிரஸ் MP குற்றச்சாட்டு!

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரித் தில்லியில் காங்கிரஸ் நடத்திய பேரணியில் திமுக பங்கேற்கவில்லை எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியையும், ஊழலற்ற சமுதாயத்தையும் உருவாக்குவது சாத்தியம் என்பதை முதலமைச்சர் விஜய் அனைவரையும் நம்ப வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தித் தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றதாகத் தெரிவித்தார். இந்தப் பேரிணியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்வில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவான அரசைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *