இன்று அரசு மரியாதையுடன் கே. பாக்யராஜ் உடல் தகனம்!

Advertisements

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இயக்குநரும் நடிகருமான பாக்யாரஜின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

1953-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அதன்பின்னர் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

 

அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, சின்ன வீடு,  உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடித்த அவர், குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். 72-வயதுடைய அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கே.பாக்கியராஜின் மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை 9 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *