
பாலிவுட் கிங் காங் ஷாருக்கான், தற்போது மேல் சிகிச்சைக்காக மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகையே ஆட்டிப் படைத்தது வரும் கான் நடிகர்களில் ஒருவர் தான் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, பதான் மற்றும் ஜவான் ஆகிய 2 படங்களுமே ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்தது. ஒரே அடுத்தடுத்து ரூ.1000 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்கிற பெருமையும் ஷாருக்கானுக்கு கிடைத்தது.
இவர் அடுத்ததாகக் கிங் என்கிற படத்திலும், பதான் என்கிற படத்திலும் நடிக்க உள்ளார். கிங் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பதான் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளது.
கடந்த ஆண்டு திரைப்பட பணி காரணமாகவும், தன்னுடைய மகன் ஆரியன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் காரணமாகவும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடாத ஷாருக்கான், தற்போது குடும்பத்துடன் தன்னுடைய விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்கான்… அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின்போது, அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்ததோடு மட்டுமின்றி, வீரர்களையும் உற்சாகப் படுத்தினார்.
அந்தச் சமயத்தில், ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு… உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து கண் தொடர்பான பிரச்சனையால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டதாகவும், மும்பையில் சிகிச்சை எடுத்து வந்த இவர், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஷாருக்கானுக்கு கண்ணில் என்ன பிரச்சனை என்பது குறித்த விரிவான விவரம் இதுவரை வெளியாகவில்லை.


