த.வெ.க தான் தமிழகத்தின் வெற்றிக் களம் – ரஞ்சனா நாச்சியார்!

Advertisements

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இந்த விழாவில் த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அதன் பின்னர், இறுதி இலக்கை அடைவதற்கான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதற்குப் பிறகு, கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையில், நேற்று பா.ஜ.க.விலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் இன்று த.வெ.க.வில் இணைய விழா நடைபெறும் இடத்திற்கு வந்திருந்தார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சனா நாச்சியார், இனி என் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தளபதி வழியில் இருக்கும் எனத் தெரிவித்தார். மொழிக்கு எதிரி இல்லை, ஆனால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிலைமை வருவதை ஏற்க முடியாது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *