திமுகவில் ராமதாஸ்: அதிமுகவில் அன்புமணி: இது எப்படி இருக்கு?

Advertisements
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி போடுவதில் மும்மரம் காட்டி வருகின்றன
தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கூட்டணி குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய கலாட்டா செய்தி ஒன்று வெளியே கிளம்பி இருக்கிறது கடந்த எட்டு மாதங்களாகப் பாட்டாளி மக்கள் கட்சியில் மிகக் கடுமையான அளவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் கட்சியின் செயல் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறையாக மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். தினந்தோறும் இதுகுறித்த மல்யுத்த செய்திகள் பத்திரிகைகளில் இடம் பெற்றுவருகின்றன
கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் சமரசம் செய்தும் ராமதாசும் அன்புமணியும் இணக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் மாம்பழ சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பலமான போட்டி அடுத்த கட்டமாக ஆரம்பித்திருக்கிறது இருவருமே தனித்தனியாக மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒருவரை ஒருவர் கட்சி நிர்வாகிகளை நீக்கம் செய்வதும் புதிதாக நியமிப்பதும் இப்போது வாடிக்கையாக நடைபெறும் செயலாக இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி துண்டாடப்படும் நிலையில் அன்புமணி ராமதாஸ் சமாதானமாகச் சென்றாலும் மருத்துவர் ராமதாஸ் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கு அன்புமணி மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து வருகிறார் ராமதாஸ்
இந்த நிலையில் கூட்டணிகளை முடிவு செய்வதில் முக்கிய கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மருத்துவர் ராமதாசை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி திமுகவில் இணையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு விடை ஏதும் கிடைக்கவில்லை
இதற்கிடையே மருத்துவர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டபோது கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூடி இதுகுறித்து முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார். வருகிற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற கணிப்பைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி வைக்கலாமென மருத்துவர் ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள் .இதற்குத் தக்கபடி அவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பற்றி ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் .இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்வது என அன்புமணி ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்து பேச இருப்பதாகவும் சொல்கிறார்கள்
இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் உடன் இணைந்து செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனும் தயாராகி வருவதாகத் திரை மறைவு தகவல்கள் தெரிவிக்கின்றன .
இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறும்பொழுது திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரும் என ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது இவர்கள் கூட்டணி சேர்ந்தால் நிச்சயமாகத் திமுக தோல்வியைத் தழுவும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளார்கள் என்பது பரபரப்பு செய்தியாகப் பார்க்கப்படுகிறது .இது தொடர்பாகத் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் டெல்லி பாஜக தலைவர்கள் திரை மறைவில் பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.
ஒருவேளை அதிமுக பாஜக தாவேக அன்புமணி ஆகியோர் கூட்டணி சேர்ந்தால் அதை முறியடிப்பதற்கு ராமதாஸ் தேவைப்படுவார்ர் எனத் திமுக மேலிடம் கருதுகிறது. எனவே வருகிற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து ஒரு அணி ராமதாஸ் தலைமையில் திமுகவுடனும் இன்னொரு அணி அன்புமணி ராமதாஸ் தலைமையில் அதிமுக தரப்பிலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தற்போதுள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணி உடையும் என்ற போக்கு மாறி இருக்கிறது மதிமுகவை பொருத்தவரையில் நாங்கள் அதிக சீட்டு கேட்கவில்லை. திமுகவுடன்தான் கூட்டணி என்று தெளிவாக வைகோ கூறிவிட்டார்
திருமாவளவன் மட்டும் கூடுதலாகத் தொகுதி கேட்டு வருகிறார் அவரையும் சமாதானப்படுத்தி விடுவோம் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . இது தவிர காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் டெல்லி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் அந்த வகையில் ராகுல் காந்தி முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனவே காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புகிறார் மு க ஸ்டாலின் . இந்த முறை நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய அளவில் போட்டி நிலவுவதால் மேற்படி கட்சிகள் கூட்டணிபற்றி இந்த மாதத்திற்குள் முடிவெடுத்து விடுவார்கள் என்பது முக்கிய செய்தி ஆகும்.
செய்தி தொகுப்பு : திரு. போஸ்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *