Advertisements

தமிழக பாரதிய ஜனதா கட்சி இரண்டாக உடையும் வகையில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தன்னந்தனி ஆளாக நின்று மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் முன்னாள் தலைவரான அண்ணாமலை. தற்பொழுது அவருக்குப் பதிலாக நைனார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது
இன்னும் அண்ணாமலைக்கு புதிதாகப் பதவி வழங்கப்படாத நிலையில் அவர் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தனது கருத்துக்களை பேசி வருகிறார் இந்த நிலையில் “அண்ணாமலை அன்பு கூட்டம் “என்ற பெயரில் புதிதாகப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பதுதான் இப்போதைய பரபரப்பு செய்திஏற்கனவே புதிய நிர்வாகிகள் நியமிக்கும் வகையில் டெல்லி மேலிடத்திற்கு அண்ணாமலை ஒரு பட்டியலும் நயினார் நாகேந்திரன்ஒரு பட்டியலும் கொடுத்துள்ளனர்
இதில் அண்ணாமலை கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்
ஏற்கனவே டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை பேசும்பொழுது எனது பதவி காலத்தில் நியமிக்கப்பட்டவர்களை 80 சதவீதம் நீக்கம் செய்ய வேண்டாம் நயினார் நாகேந்திரன் புதிதாகப் பதவியேற்றுள்ளதால் 20 சதவீதம் அவரது ஆதரவாளர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார் ஆனால் டெல்லி மேலிடம் தலைகீழாக நிர்வாகிகளை நியமித்து வருவது அண்ணாமலைக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள்
இதனிடையே “அண்ணாமலை அன்பு கூட்டம்” என்ற பெயரில் புதிய அணி ஒன்று உருவாகி உள்ளது.
இதற்காக உறுப்பினர் படிவம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உறுப்பினர் படிவத்தில் பெயர் முகவரி கைபேசி எண் மட்டும் அல்லாமல் ஆதார் கார்டு பான்கார்டு சட்டமன்ற தொகுதி பூத் நம்பர் என அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த விண்ணப்ப படிவத்தில் புதிதாக அணிசேர்க்கும் அமைப்பின் கைபேசி எண் ஈமெயில் ஐடி whatsapp எண் ஆகியவையும் தரப்பட்டுள்ளன .கேரளாவைச் சேர்ந்த சாஜன் என்பவர் டெல்லியில் இருந்த படி இதனைச் செய்வதாகத் தெரிகிறது. தற்பொழுது டெல்லி தமிழர்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டு வரும் இந்த விண்ணப்பம் விரவிலேயே தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
அண்ணாமலை பெயரில் புதிதாக அணி சேர்வது குறித்து நயினார் நாகேந்திரன் மிகுந்த கோபமடைந்துள்ளார் இதுகுறித்த தகவலை டெல்லி மேலிடத்திருக்கும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுமூலம் விரைவிலேயே தமிழக பாஜகவில் உள்குத்துப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு : திரு.போஸ்
Advertisements
