நிதி தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு..!

Advertisements

மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசு மீது தொடுக்கும் தாக்குதல் மிகவும் கொடூரமான தாக்குதல் என்றும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில்  வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை  தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புதுறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் விவசாயம் சார்ந்த  உபகரணங்கள்   நவீன விவசாய இயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கலந்து கொண்டனர்.

இதில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புதுறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியபோது, மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசு மீது தொடுக்கும் தாக்குதல் மிகவும் கொடூரமான தாக்குதல் என்றும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி பற்றாக்குறையிலும்  தமிழ்நாடு இந்தியாவிலேயே  11.19 சதவீத விழுக்காடு என்ற வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் பெரியார்,  அண்ணா , கலைஞர்  எல்லோரும் கற்றுக் கொடுத்த பாடத்தில் தான் முதன்மை மாநிலமாக உயர்ந்து நிற்கிறது எனறும் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *