விஜய் பதவிக்கு வரக்கூடாது .. கங்கணம் கட்டிய வாரிசு.. பாஜகவும் ஆவேசம்.!

Advertisements

தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய்  ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவும் தகவல். ‘தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக கூறப்படுகிறது.

‘திமுக தலைமை நேற்றே இப்படியொரு ஐடியாவோடு அதிமுக தலைமையை அணுகியது. ஆனால், அதிமுகவுக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லை. யதார்த்தமான முரண்பாடுகளை காரணம் காட்டி இதெல்லாம் சரிபட்டு வராது என மறுத்துவிட்டார்கள்.

இதன்பிறகு இரு தரப்புக்குமே சில அதிர்ச்சிகள் காத்திருந்தது. உடன் நிற்பார்கள் என திமுக நம்பிய காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்தோடு விஜய்யை போய் சந்தித்தது. அதிமுகவிலும் ஒன்றிரண்டு முக்கிய தலைகள் தவெகவுடன் கூட்டணி சேரும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமியை நெருக்கடி கொடுத்தனர். ஆனால், பாஜகவும் விஜய் ஆட்சியமைப்பதை விரும்பவில்லை என்கின்றனர்.

விஜய் செய்த சில காரியகங்கள் பாஜக தலைமையை ரொம்பவே கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் விஜய் வென்றவுடன் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு 20 மணி நேரம் கழித்துதான் விஜய் நன்றி கூறினார். அதுவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்ட மோடியின் ஐடியை டேக் செய்யாமல், பிரதமர் அலுவகத்தின் ஐடியை டேக் செய்து விஜய் நன்றி கூறியிருந்தார். விஜய்யின் இந்த ஆணவப் போக்கு டெல்லிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக, காங்கிரஸின் ஆதரவையும் விஜய் பெற்றுள்ளார். இதனால், பாஜக தலைமை ரொம்பவே கொந்தளித்துப் போனது.

இதனால், டெல்லியில் இருந்து முக்கியப்புள்ளி ரகசியமாக, திமுக தலைமையை அணுகியுள்ளது. ‘அதிமுக ஆட்சி அமைக்கட்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராகட்டும். விஜய்யை அதிகாரத்துக்கு வர விட வேண்டாம்’ என்கிற மெசேஜ் திமுக தலைமையிடம் சொல்லப்பட்டுள்ளது. திமுக தலைமையை விட வாரிசே விஜய் ஆட்சிமைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். வாரிசின் விருப்பத்தால் அந்த மிக முக்கிய விஐபி புள்ளி கொண்டு வந்த மெசேஜை திமுக தலைமை தீவிரமாக ஆராய்ந்தது.

இதைத் தொடர்ந்தே  திமுக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு இந்த ஐடியாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், எடப்பாடிக்கும் திமுகவின் ஆலோசனையை ஏற்க வேண்டிய தேவை கட்சிக்குள்ளேயே உருவாகியிருக்கிறது.சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள்  விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதிகாரத்துக்குள் வர விரும்புகின்றனர். அவர்களும் எடப்பாடியை நெருக்குகின்றனர். நேற்று வந்த விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதை விட, திமுக ஆதரவோடு ஆட்சியமைப்பது மேல் என்றே எடப்பாடி கணக்குப் போட்டிருக்கிறார். அதிமுக சார்பாக மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். கூட திமுக கட்சியில் எந்த சங்கடமும் இல்லாமல் இணைந்து விட்டார்.

அப்படியிருக்கையில், தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுக்கலாம் என்கிற முடிவில் எடப்பாடி இருப்பதாக சொல்கிறார்கள்.இதன் எதிரொலியாகவே கே.பி.முனுசாமியை வைத்து ‘விஜய்க்கு ஆதரவு இல்லை’ என்றும் பத்திரிகையாளர்களிடம் பேச வைத்திருக்கிறார் எடப்பாடி. அத்தோடு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் சென்னையிலேயே தங்க வையுங்கள் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், திருமாவும் நாளை உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டி விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவில் இருந்திருக்கிறார்.இந்த நேரத்தில் . ‘அவசரப்படாதீர்கள். வேறொரு திட்டம் இருக்கிறது.

காத்திருங்கள்’ என திமுக தலைமை கூறியுள்ளது. இதைத் தொடர்ந்தே , திருமா உயர்நிலைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் நேற்றிரவு விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விவாதித்துள்ளனர்.  டி.ஜி.பியிடம் பேசிய விஜய், ‘இப்போதைக்கு சூழல் சரியில்லை. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு , கான்வாய் போன்றவை எனக்கு  வேண்டாம். அதை வாபஸ் பெற்று விடுங்கள். அட்சி அமைத்த பிறகுதான், புரோட்டக்கால் படி மீண்டும் பாதுகாப்பு தாருங்கள் ‘ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்தே, அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளையில், முதல்வர் ஆவதற்கு முன்னரே, விஜய்க்கு எப்படி கான்வாய் வழங்கப்படலாம் என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதால், கான்வாய் விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *