Patinampakkam : பனையூரில் எம்.எல்.ஏ-க்கள்.. கலக்கத்தில் தொண்டர்கள்..!

Advertisements

த.வெ.க மற்றும் அதன் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் மொத்தம் 112 இடங்களைப் பெற்றுள்ளனர்.

ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளிக்க, த.வெ.க தலைவர் விஜய்க்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நிரூபிக்க கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளில் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் பட்டினம்பாக்கத்தில் அக்கட்சியின் தலைவர் ஆலோசனையில் ஈடுபட, மறுபுறம் பனையூரில் உள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தகட்ட நகர்வு தெரியாமல் காத்திருப்பதால், த.வெ.க தொண்டர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “ஆளுநர்களைக் கருவியாக வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் நடத்துகிறது” எனச் சாடியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *