சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்:தலைவர்கள் வாழ்த்து..!

Advertisements

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். இந்திய பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில்,  ரஜினிகாந்த்தின் 75 ஆவது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், திரைப்பட உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின்  குறிப்பிடத்தக்கது என்றும் அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திப்பதாகவும் கூறினார். இதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது வலைப்பதிவில், மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை என்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உள்ளவர் என்று ரஜினிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் தன் நண்பர் ரஜினிகாந்திற்க்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து பதிவில், தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக விளங்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு தனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *