வார இறுதியில் தங்கம் விலை குறைவு!

Advertisements

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வாரத் தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57ஆயிரத்துக்கும், நேற்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது.

மொத்தத்தில் தங்கம் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *