இந்தியாவுக்கான சலுகை தொடருமா? டிரம்ப் முடிவு செய்வார் – மார்க்கோ ரூபியோ!

இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய சலுகைகளை நீட்டிப்பதா என்பதை டொனால்டு டிரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குத்  தேவையான கச்சா எண்ணெயை ரஷியாவிடமிருந்து வாங்குவதற்காக வழங்கப்பட்ட சலுகைகளை இனி நீட்டிக்கப் போவதில்லை என டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சந்தையின் தற்போதைய நிலையை மதிப்பிட்ட பின்னரே, சலுகைகளை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்பதை டிரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் நிறுத்தம், ஹார்முஸ் நீரிணை திறப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடியும் என ரூபியோ தெரிவித்துள்ளார்.  கெப்லர் கண்காணிப்பகத்தின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு சராசரியாக, ஒரு நாளைக்கு 26 இலட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ரஷிய எண்ணெய் வாங்கத் தடை விதிக்கப்பட்டால் இந்தியாவுக்குப் பாதிப்பு இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *