தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் ரத்து – தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்குவதற்கான சாத்திய அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரை அரசு ரத்துச் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மண்டலங்களில் துப்புரவுப் பணியைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகளைத் தனியார்மயம் ஆக்குவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தது.

தனியார் மயமாக்கும் முயற்சிக்குத் தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்துத் தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தனியார்மயச் சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரைத் தமிழ்நாடு அரசு ரத்துச் செய்துள்ளது.

திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 2 மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்குக் கொடுப்பதைக் கண்டித்துக் கடந்த ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தவெக ஆட்சியிலும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்க முயற்சி நடைபெற்று எதிர்ப்பு எழுந்ததால் கைவிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *