இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மாறி மாறி தாக்குதல் நடைபெற்று வருவதால் உலக நாடுகள் அச்சம்

Advertisements

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மாறி மாறி தாக்குதல் நடைபெற்று வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர்.

அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இஸ்ரேலின் ராணுவ தலைமையகம், மற்றும் முக்கிய நகரங்கள் பாதிக்கப்படைந்துள்ளன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியது. மேலும் , இந்த மோதலை தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் என எச்சரித்தது. தனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

முன்னதாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தியை செய்து வருவதாகவும், அதன்  மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்புள்ளதாக ஈரான் மீது குற்றம் சாட்டப்பபட்டது. இதன் காரணமாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் , இஸ்ரேல் மீது, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை நோக்கி 200க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதனால் டெல் அவிவ்வை ஒட்டிய மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள ரிஷான் லெஷியான் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மத்தியில் குண்டுகள் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்டது. இதனால்  இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மாறி மாறி தாக்குதல் நடைபெற்று வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *