காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு – மத்திய அரசுக்கு பா.ம.க. வலியுறுத்தல்!

Advertisements

காவிரி – கோதாவரி ஆறுகளின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி காவிரி கோதவரி நதி இணைப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  கர்நாடகத்தில் 3 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நதிகளை இணைப்பது குறித்து ஆதரவான சூழல் தென் மாநிலங்களின் முதல்-அமைச்சர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தவும், காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *