
மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்த பழனிசாமி, திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளப் பதிவில், திமுக அரசு புதுத்திட்டம் கொண்டு வந்தால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் திகு திகு என எரிகிறது என்றார். தொடர்ந்து, பழனிசாமி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அன்புமணி சேர்ந்த போது, வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி அன்புமணி கூட்டணி மாறிக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.
ஆனால், இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அன்புமணியோடு ஐக்கியமாகியிருக்கிறார். மேலும், கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா? என ஓர் ஆண்டுகாலமாக ஓலமிட்டுக் கொண்டிருந்தப் பழனிசாமிக்கு, திமுக அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டம் நினைவுக்கு வந்ததால் ஒப்பாரி ஓலமிட்டிருக்கிறார் என தெரிவித்தார்.




