
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞரை நான்கு பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ரஞ்சித். இவர் இரவில் இருசக்கர வாகனத்தில் பாத்தம்பட்டியில் இருந்து ஆலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள சாராயக் கடை அருகே அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.
அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ரஞ்சித்தை ஓட ஓட விரட்டி அந்தக் கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இது குறித்து ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து முன்பகையால் இந்தக் கொலை நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.




