தென்காசியில் கல்குவாரியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.!

தென்காசியில் கல்குவாரியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், நையாண்டி மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடையம் அருகேயுள்ள மயிலப்பபுரம் பகுதியில், கோவில் திருவிழாவிற்கு நையாண்டி மேளம் வாசிக்கச் சென்ற நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அறிந்த கடையம் காவல்துறையினர்,  முருகேசன் உடலை மீட்டுக் கூறாய்வுக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, முருகேசனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் தென்காசியில் மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *