இரு தரப்பும் ஒத்துழைத்தால் மட்டுமே அமைதி சாத்தியம்..!

 உலகளவில் எட்டு போர்களை சுலபமாக முடித்து வைத்த எனக்கு, ரஷ்யா, உக்ரைன் போரை முடிப்பது பெரும் சிரமமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா உட்பட எட்டு போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தொடர்ந்து, அவர் இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில், இதுதொடார்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாங்கள் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி வருகின்றோம் எனவும், வெறும் 10 மாதங்களில் எட்டு போர்களை சுலபமாக முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், உக்ரைன் – ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகள் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர தனக்கு சிமமாக உள்ளது எனக் கூறினார். தொடர்ந்து,  இருதரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அமைதிப் பேச்சு வெற்றிப் பெறும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *