புதுக்கோட்டையில் புதிய தார் சாலைப் பணிகள் தொடக்கம்..!

 வடசேரிபட்டி மற்றும் முள்ளூர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டி மற்றும் முள்ளூர் பகுதியில் கடந்த 18 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, தாவூத் மில் முதல் வடசேரிபட்டி வரையிலும் மற்றும் முள்ளூர் முதல் கும்முப்பட்டி வரையிலும் தார் சாலை அமைப்பதற்கானப் பணியினை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் கலியமூர்த்தி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *