Advertisements

விளாத்திகுளம் அருகில் நடைபெற்ற சத்துணவு சிறுதானிய திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் விவசாயிகளுக்கு வேளாண் உபகரண பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சத்துணவு சிறுதானிய திருவிழா நடைபெற்றது. இதனை, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் தொடங்கி வைத்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு வேளாண் உபகரண பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து விழாவில், கோவில்பட்டி வேளாண் பல்கலைக்கழகம் ஸ்கேட் அறிவியல் நிலையம் ஆகிய துறைகள் சார்பில், இயந்திரங்கள், விதைப்பொருட்கள், வேளாண் உபகரணங்கள் ஆகியவை காட்சிப்டுத்தப்பட்டிருந்தது. இதில், 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
Advertisements


