
தாராபுரம் சந்தையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக் கட்டடத்தைத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், திமுக ஆட்சியில் அரசின் அனைத்துத் திட்டங்களும் விரைவாக மக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், துணைத்தலைவர் ரவிச்சந்தரன், நகராட்சி ஆணையர் முஸ்தபா, பொறியாளர் சுகந்தி, உதவிப் பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



