சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் – இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்கள்!

Advertisements

கொலம்பியாவில் நடைபெற்ற 56ஆவது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணியினருக்குப் பிரதமர் மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் புகாரமங்காவில் நடைபெற்ற 56ஆவது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியைச் சேர்ந்த கனிஷ்க் ஜெயின், ரித்தேஷ் ஆனந்த் பெண்டாலே, ரிஷித் கார்க், ஸ்ரேஸ்த் சுரைய்யா, ஸ்வரித் ஜோஷி ஆகியோர்  தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதுகுறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளிட்டுள்ள பதிவில், கொலம்பியாவின் புகாரமங்காவில் நடைபெற்ற 56ஆவது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்களை  வென்ற இந்திய அணியினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவர்களது இந்த சாதனை, இளைய ஆற்றலின் எல்லையற்ற திறனுக்கும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கும் மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், கடந்த பத்தாண்டுகளில், இந்த ஒலிம்பியாட் மேடையின் பல்வேறு போட்டிகளில் நமது மாணவர்கள் தொடர்ந்து மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருவதும் சம அளவில் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *