Pranayama: மூச்சுப்பயிற்சி!

Advertisements

நுரையீரலின் காற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான விழப்புணர்ச்சியை உண்டாக்குகிறது. மூளையில் சுரக்கும் வலது மற்றும் இடது ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது…

தரை விரிப்பில் அமைதியாக உட்கார்ந்து நீங்கள் மூச்சு விடுதலை கவனியுங்கள். 5 நிமிடங்கள் இயற்கையான காற்றை சுவாசித்து மெதுவாக மூச்சு விடுங்கள்.

கெயன் முத்திரையில் உட்கார வேண்டும். அதாவது வலது அல்லது இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலானது பெருவிரலை தொடும் படி வைத்து மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். (படத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்).

இந்த ஆசனம் செய்யும்போது மூச்சை மெதுவாக இரு மூக்குத்துவாரங்கள் வழியாக இழுத்து ஒரு மூக்குத்துவாரங்கள் வழியாக வெளியே விட வேண்டும். ஒரு துவாரத்தை பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொள்ள வேண்டும்.

மூச்சை ஒவ்வொரு துவாரம் வழியாக மாற்றி மாற்றி விட வேண்டும் வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து அதற்கு இடது துவாரம் வழியாக வெளியிட வேண்டும்.

இதற்குப் பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொண்டு செய்ய வேண்டும். இதையே 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். எந்த மூக்குத்துவாரங்கள் வழியாக முதலில் மூச்சை வெளியே விட்டமோ அதே துவாரம் வழியாக வெளியிடும் வரை செய்து விட்டு ஆசனத்தை முடித்துக் கொள்ளலாம்.

பயன்கள்:

நுரையீரலின் காற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான விழப்புணர்ச்சியை உண்டாக்குகிறது. மூளையில் சுரக்கும் வலது மற்றும் இடது ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. உடல் வெப்பநிலையைச் சீராக்குகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *