Divya Bharti: இடுப்பழகை நச்சுனு காட்டிய திவ்ய பாரதி!

இடுப்பழகை நச்சுனு காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த திவ்ய பாரதி

பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்துப் பிரபலமான நடிகை திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் தான் திவ்ய பாரதி. விதவிதமாகக் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன்மூலம் பேமஸ் ஆன இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். கோலிவுட்டில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் பேச்சிலர்.

செல்வகுமார் இயக்கிய இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுக்களை பெற்ற திவ்ய பாரதிக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. தற்போது மூன்று படங்களைக் கைவசம் வைத்துள்ளார் திவ்ய பாரதி.

அதில் ஒன்று தான் மதில்மேல் காதல் இப்படத்தை வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். இதில் பிக்பாஸ் 2-வது சீசனில் டைட்டில் வின்னரான முகென் ராவுக்கு ஜோடியாகத் திவ்ய பாரதி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதுதவிர சேரன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரிலும் நடித்து வரும் திவ்ய பாரதி, ஆசை என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இப்படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இப்படி கைவசம் மூன்று படங்கள் இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைத் தட்டிதூக்க விதவிதமான கவர்ச்சி போட்டோஷூட் நடத்திவரும் திவ்ய பாரதி, தற்போது டைட்டான வெள்ளை நிற பேண்ட் அணிந்து இடுப்பழகை நச்சுனு காட்டி செம்ம கவர்ச்சியாகப் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *