இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வரைப் புகழ்ந்த விஜய் சேதுபதி!

ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு” திரைப்படத்திற்கு அழகாக இசையமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வருக்கு, நடிகர் விஜய் சேதுபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விஜய் சேதுபதி “ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியபோது, படத்தின் டீசர் இசை மிகவும் அழகாக இருந்தது என்று தெரிவித்தார்.
பொதுவாக இசையமைப்பாளர் என்றாலே பணி தாமதமாகும் என்ற டிரெண்ட் உள்ளது என்றும் ஆனால் அதெல்லாம் தவிர்த்து அழகாக இசையமைத்துக் கொடுத்ததில் நிறைய சந்தோஷம் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *