கடல் பாறையில் நடிகை யோகா..

Advertisements

கடற்கரை பாறைமீது அமர்ந்து யோகா செய்து கொண்டிருந்த நடிகை அலையில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலன் கண் முன்னே கடல் அலையில் சிக்கிய நடிகை நீரில் மூழ்கி உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்ய நாட்டின் பிரபல நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா. 24 வயதான இவர் தன் காதலனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள கோச்சாமுய் கடற்கரையில் அலைகளை ரசிப்பதற்காக லாட்-கோ வியூபாயின்ட்டுக்கு சென்றவர், சிறிது நேரம் யோகா செய்வதற்கு முயன்றிருக்கிறார். பாறைகள் நிறைந்த கடற்கரையில் அவர் ஒரு பெரிய பாறைமீது அமர்ந்து யோகா செய்துள்ளார். அதை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஒன்று அடித்து, நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர், நடிகையைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.

உடனே இது தொடர்பாக மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 15 நிமிடங்களில் மீட்புக் குழுக்கள் வந்தும் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

பின்னர் நீண்ட தேடுதலில் சில கி.மீத்தூரத்தில் நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவின் உடலைச் சடலமாக மீட்டனர். ரஷ்ய நடிகை கமிலா தாய்லாந்தின் கோச்சாமுய் கடற்கரையை மிகவும் நேசித்துள்ளார்.

தனது பதிவுகளில் “பூமியில் சிறந்த இடம்” எனக் கூறி, அடிக்கடி இங்கே வந்து நேரம் செலவிட்டு வந்துள்ளார். ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தான் மிகவும் நேசித்த கடற்கரையிலேயே மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *