Unmask Cancer Press Meet: புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு புதிய திட்டம்!

Advertisements

புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு எதிரான சமூக ஒருதலைச்சார்புகளை எதிர்கொள்ள ~ ”அன்மாஸ்க் கேன்சர்” என்றபுதிய திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர் தொடங்கியுள்ளது.

புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வாக, ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குவது) என்ற புரட்சிகரமான பரப்புரைத் திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs) அறிமுகம் செய்துள்ளது. புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவிலிருந்து வெளிக்கொணர்வது, அது தொடர்பான கட்டுகதைகளையும், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வை வளர்ப்பது என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

புற்றுநோய் தினம் விரைவில் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், புற்றுநோயை வென்று உயிர்வாழ்பவர்கள் எதிர்கொள்கிற பாகுபாடு, உதாசீனம் போன்ற துரதிர்ஷ்டமான யதார்த்த நிலையை நேருக்குநேராக எதிர்கொள்ள ACC எடுக்கும் ஒரு தைரியமான நடவடிக்கை இது.

ஏசிசி மதுரையின் மருத்துவ புற்றுநோயியல் மூத்த ஆலோசகர், டாக்டர் தேவானந்த், மதுரை அப்போலோ புற்றுநோய் மையத்தின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் பாலு மகேந்திரா, ஏசிசி மதுரையின் மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தீனதயாளன் கூறுகையில் “புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகுபாடும்,

உதாசீனமும் அவர்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை உருவாக்குவது நின்றுவிடுவதில்லைளூ அவர்களது மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்பை இது ஏற்படுத்துகிறது. இந்த முக்கியமான பிரச்சனை மீது சமூகத்திற்கு எடுத்துக்கூறி உணர்வூட்டுவதற்கான ஒரு முதன்முறை முயற்சியாகவும் அணுகுமுறையாகவும் அன்மாஸ்க் கேன்சர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

மேலும் புற்றுநோய் வெற்றியாளர் ராயப்பன் மற்றும் மாரிமுத்து பேசுகையில், “புற்றுநோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முன்னோடியில்லாத அணுகுமுறையாகும்என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *