பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் 10 ஆவது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜுன் 12 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு தயாராவதற்காக அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில், கார்டிப்பில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால், ஸ்மிருதி மந்தனா அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பார்தி புல்மாலி ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *