
பொட்டல்புதூர் தர்கா தமிழ் நாட்டில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூர் தர்காவானது 17- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
கி.பி. 1674 -ல் கட்டப்பட்டிருப்பதாக வரலாறு கூறுகிறது. இந்த தர்கா இந்து கோவில் கட்டிட கலையினைத் தழுவி இருக்கும். பாக்தாத்தில் உள்ள தர்காவிற்கு அடுத்தபடியாக பழமையும், சிறப்பும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இணையானதாக கருதப்படுகிறது.
சிறப்புகள்;

இந்த தர்காவானாது இந்து முறைப்படியும் கட்டமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மஞ்சள் மரங்களும் நெய் வாசமும் இந்த தர்காவின் தனிச் சிறப்பு. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. லப்பை பிரிவினர் இந்த தர்காவை தொழுகைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மதத்தைக் கடந்த மாண்பு;
மதம் கடந்த ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த தர்கா. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் இந்த தர்காவிற்கு வந்து தங்கள் பிரார்த்தனை முன் வைக்கின்றனர். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் அனைவரும் அதீத நம்பிக்கையோடு தர்கா வருவது இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது.

கந்தூரி திருவிழா;
பொட்டல்புதூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு மிகவும் பெயர் பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த கந்தூரி விழா நடைபெறும். அனைத்து மாநிலங்களில் இருந்தும், அனைத்து மதத்தினரும் வருகை புரிவது விழாவில் கலந்து கொள்வர். மக்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் காணிக்கை செலுத்துவர்.
இங்கு செய்யப்படும் பானை, சந்தன பேஸ்ட் ராவண சமுத்திரத்தில் விற்கப்படுகிறது. பிறகு இந்த சந்தனக் கூடு ராவண சமுத்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு சாத்துதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆண்டவர் திருவிழாவானது இந்துக்கள் நடத்தும் இந்து திருவிழாவைப் போலவே இருக்கும்.
ஆடு, கோழி போன்றவைகளை தானமாக தர்காவிற்கு வழங்குவர் மக்கள். பழங்கள் முதலான பொருட்களும் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

