Aval payasam: அவல் பாயாசம்!

நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும்  கண்டிப்பாக இனிப்பு  இருக்கும்.

இனிப்பில்  நாம் சேர்த்துக் கொள்ளும் இனிப்பு என்றால் பாயசம் தான். பாயாசங்கள் பல வகைகளில் செய்வார்கள். ஆனால் பாரம்பரிய காலத்தில் இருந்து நம் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது பாயாசம்.

இப்போது நாம் அவல் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

அவல் -2 கப்
நெய்-50 கிராம்பால்-1 டம்ளர்
முந்திரி- 5 கிராம்
திராட்சை- 5 கிராம்

தண்ணீர்- 2 டம்ளர்
உப்பு- தேவையான அளவு

செய்முறை;

ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும்.
நெய் சூடேறி வரும் வரை காத்திருந்து. நெய் சுடேறியவுடன் முந்திரி பருப்புகளை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்கவும் முந்திரி பருப்பு பொன்னிறமாக வந்தவுடன் உலர் திராட்சையும் சேர்த்து வதக்கவும்.
அவலை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் சேமியாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

தண்ணீர் கொதித்தவுடன் அதில் உப்பு அவலையும் சேர்த்து கலக்கவும்.
பின்பு இத்துடன் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு இதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
பால் நன்றாக சூடேறி கொதித்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்பையும் உலர்திராட்சையும் இதனுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான அவல்  பாயாசம் தயார்.
கமகம வாசனையோடு சூடாகக் குடிக்க நன்றாக இருக்கும்.  நாம் சேர்த்திருக்கும் அவலில்  நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *