Hockey India: ஜெயிக்க போவது யாரு?

மலேசியாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா அணி உள்ளது…

சென்னை: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியைத் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்குப் பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது. ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *