Shimla: சிலு சிலு சிம்லா… சில்லுன்னு இருக்கும் சிம்லா..

Advertisements

சிம்லா என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும்.

1864 இல், சிம்லா பிரிட்டிஷின் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக அறிவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு, இந்த நகரம் கிழக்கு பஞ்சாபின் தலைநகராக மாறியது. பின்னர் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இது மாநிலத்தின் முக்கிய வணிக, கலாச்சார, கல்வி மையமாக உள்ளது.

கட்டிடக்கலை:

சிம்லாவில் பாரம்பரியமான பல கட்டடங்கள் உள்ளன, அவை டுடோர்பெதன் மற்றும் நவ-கோதிக் கட்டிடக்கலைகளில் காலனித்துவ காலத்திலிருந்தே வடிவமைக்கப்பட்டு உருவாக்கபட்டவை. மேலும் இங்கு பல கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இங்கு உள்ள காலனித்துவ கால கட்டிடக்கலை, தேவாலயங்கள், கோயில்கள், நகரத்தின் இயற்கை சூழல் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

கோயில்:

நகர மையத்தின் முக்கியமான இடங்களாக ஸ்ரீஅனுமான் ஜக்கு (சிலை) , ஜாகூ கோயில், வைஸ்ரீகல் லாட்ஜ், கிறிஸ்து தேவாலயம், மால் சாலை, தி ரிட்ஜ், அன்னடேல் ஆகியவை உள்ளன. நகர மையத்தின் வடக்குப் புள்ளி ஜாக்கூ, தெற்கே அன்னடேல், கிழக்குப் புள்ளி சஞ்சௌலி, மேற்குப் புள்ளி சோட்டா சிம்லா போன்றவை ஆகும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை,  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

மிகப்பெரிய இயற்கை பனிச்சறுக்கு:

இங்குள்ள செங்குத்தான நிலப்பரப்பு காரணமாக, 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்டிபி இமயமலை பைக் பந்தயம் சிம்லாவில் நடக்கிறது. மேலும் இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இயற்கை பனிச்சறுக்கு வளையமும் சிம்லாவில் உள்ளது. சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், இந்த நகரம் பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒரு கல்வி மையமாகவும் உள்ளது.

காளி பாரி கோயில், சியாமளா மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்லா நகரம் காளியின் அவதாரமான சியாமளா அன்னையின் பெயரிலிருந்து வந்தது. இந்த அம்மனுக்கான காளி பாரி கோயிலானது ரிட்ஜ் அருகே பாண்டனி மலையில் உள்ளது.

பெயர்;

ஜாகூ கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அனுமான் சிலை .
இன்றைய சிம்லா நகரம் உள்ள பகுதியின் பெரும்பகுதி 18 ஆம் நூற்றாண்டில் அடர்ந்த காடாக இருந்தது. இப்பகுதியின் பழைய குடியிருப்பின் ஒரே அடையாளமாக இருந்தவை ஜாகூ கோயிலும் ஆங்காங்கே உள்ள சில வீடுகளும் மட்டுமே. காளியின் அவதாரமான ஷியாமளா தேவியின் பெயரால் இந்த பகுதி ‘சிம்லா’ என்று அழைக்கப்பட்டது.

சிம்லாவின் ஏழு மலைகள்:

சிம்லா ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது. அந்த ஏழு மலைகள் இன்வெர்ரம் மலை, அப்சர்வேட்டரி மலை, பிராஸ்பெக்ட் மலை, சம்மர் மலை, பாண்டனி மலை, எலிசியம் மலை, ஜக்கு மலை ஆகியவை ஆகும். சிம்லாவின் மிக உயரமான இடம் ஜக்கு மலை ஆகும், இது 2,454 மீட்டர்கள் (8,051 அடி) ) உயரமானதாக உள்ளது. அண்மைக் காலங்களில் இந்த நகரம் இந்த ஏழு மலைகளைக் கடந்தும் பரவியதாக உள்ளது.

இங்கு எப்போதுமே குளிர்ச்சியாக அதாவது சில்லென்று இருக்கும். சிம்லா என்றால் சிலிர்க்கும் நம் உள்ளம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *