
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான யமாகுச்சியை வீழ்த்தி பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த, தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
இதில், சிறப்பாக விளையாடி முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளையாடுவதற்கு முன் காயம் காரணமாக ஜப்பானின் யமாகுச்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன், காரணமாக பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.



