Advertisements

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வருகின்ற 19 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements


