பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு !

சென்னை, தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் நுகர்வோரின் வசதிக்காகவும் உரிய வருவாய் ஈட்டவும் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றிய பிறகு அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பவும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மின் மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *