
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஜ அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டப்போது நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தவெக தலைவர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு சமன் அனுப்பியதையடுத்து ஆஜரானார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குறித்தும் கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிகளைப்பற்றி பல்வேறு நெருக்கடியான கேள்விகளை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இந்நிலையில், விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பொங்கலுக்கு பிறகு மீண்டும் விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது.



