அதிமுகவில் அடுத்தடுத்து காலியாகும் விக்கெட்டுகள்..! என்ன காரணம்.?

அம்பாசமுத்திரம்  தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ராஜனாமா கடிதத்தை சபாநாயகர் பிரபாகரனிடம் வழங்கினார்.

அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனிடம் வழங்கினார். அப்போது, ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதாமல் தட்டச்சு செய்து எடுத்து வந்ததால், அதனை வாங்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால், ராஜினாமா கடிதத்தைக் கைப்பட எழுதி சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா வழங்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. மேலும், ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா, தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *