அரசியல் என்பது மக்களின் சேவை – மாணிக்கம் தாகூர் பேச்சு.!

Advertisements

தங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் இல்லை அது மக்களின் சேவை என்றும்  அதுவே காங்கிரஸ் மாடல்  என நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றப் போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை,சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற வளமிக்க துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை என்றும் மகாராஷ்டிரா, கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களில்,மக்களை மையமாகக் கொண்ட துறைகளில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது என்று தெரிவித்தார்.

தங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் இல்லை அது மக்களின் சேவை என்றும்  அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறினார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *