தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தில்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தற்போது நாடு முழுவதன் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்று திமுகதான் முதன்முதலில் எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருவதாகவும், அது ஏற்படுத்தும் ஆபத்துகளையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும் கூறினார்.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்து, முதலாவது அரசியல் சாசனத் திருத்தத்திற்குப் பாதையமைத்த தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்..

