மலைக்கடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையம் : டிரம்ப் விடுத்த எச்சரிக்கை..!

Advertisements

ஈரான் மலைக்கடியில் உள்ள அணுசக்தி மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் தொடர்பாக  வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் தெரிவித்தார்.

ஈரானில் மலைக்கடியில் உள்ள “பிக்ஆக்ஸ் மலை” என்ற ரகசிய நிலத்தடி அணுசக்தி மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக ஈரானின் ராணுவ தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிலத்தடி அணு வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது போரின் விரிவாக்கமாகக் கருதப்படும் என்றும் அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, பஹ்ரைன் மீது ஈரான் ஏவிய டிரோன் தாக்குதல்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *