India vs Pakistan: ரசிகரைக் கன்னத்தில் பளார் பளார் விட்ட பெண் போலீஸ்!

Advertisements

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பெண் போலீஸை தாக்க முயற்சித்த ரசிகரைக் கன்னத்தில் பளார் பளார் விட்ட போலீஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது   பெண் போலீஸ் ஒருவரை ரசிகர் தாக்க முயற்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் தனது இருக்கையில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். முதலில் பொறுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் போலீஸ், அதன் பிறகு அவரை எச்சரித்துள்ளார்.

ஆனால், அதற்கும் அந்த ரசிகர் ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கவே, பொறுமை இழந்த பெண் போலீஸ் ரசிகரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதற்கும், அந்த ரசிகர் பெண் போலீஸை தாக்க முயற்சித்துள்ளார். அதன் பிறகு மற்ற ரசிகர்கள் சமாதானம் செய்துள்ளனர். எனினும், இச்சம்பவம் தொடர்பாக அந்த ரசிகரைப் பெண் போலீஸ் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், மற்ற ரசிகர்கள் அனைவரும் வேண்டாம் என்று மறுப்பு தெரித்துள்ளனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *