Ettayapuram: ராணுவ வீரர் வெட்டிக் கொலை!

Advertisements

ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரரை மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர் கடந்த 2018-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வேல்முருகன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று வேல்முருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்துக் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். முன்விரோதம் காரணமாக வேல்முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *