Leo FDFS: அனுமதி மறுப்பு!

Advertisements

லியோ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு  அனுமதி மறுப்பு!

லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் முடிவைத் தமிழ்நாடு அரசிடம் விட்டு விடுவதாகக் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால்  விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக “லியோ” படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் லியோ படத்துக்குச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நேற்று (அக்டோபர் 16) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், காலை 9 மணி காட்சிக்குப் பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் பேசிய நீதிபதி அனிதா சுமந்த், “லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் முடிவைத் தமிழ்நாடு அரசிடம் விட்டு விடுவதாகக் கூறினார். அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது.

காலை 9 மணிக்குன் தான் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்பதால் அதனை மீற முடியாது. அக்டோபர் 19 மற்றும் 24 ஆம் தேதிவரை காலை 7 மணிக்குக் காட்சிகளைத் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கட்டும். இதுகுறித்து  லியோ தயாரிப்பு தரப்பு முறையீட வேண்டும். இதற்கு நாளை (அக்டோபர் 18) மதியத்துக்குள் அரசுப் பதில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *