எரிசக்திப் போக்குவரத்து மிக முக்கியம்..!

எரிசக்தியின் தடையற்றப் போக்குவரத்து இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஈரான் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ஈரானில் அதிகரித்து வரும் பதட்டங்கள், பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். இதையடுத்து, அங்குள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதும் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என வலியுறுத்தினேன் என்றார். தொடர்ந்து, அமைதி மற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்தியாகத் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *