மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்.! தொடரும் பாஜக – வின் அட்டூழியம்..!

Advertisements

மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து, இன்று வரை தொடர்கிறது..

மேலும் கடந்த காலங்களில் மணிப்பூரில் மைத்தேயி – குக்கி சமூகத்தினர் இடையிலான ஏற்பட்ட தாக்குதலில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கோவில்கள், தேவாலயங்கள் பொது நலக்கூடங்கள் போன்றவையும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.. மேலும் ,அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குக்கி மற்றும் மெய்தி இன குழுக்கள் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இருதரப்பை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக கலவரக்காரர்கள் ராக்கெட் லாஞ்சர்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் மொய்ரெங் பகுதியை சேர்ந்த முதியவர் ஒரு உயிரிழந்தார்.மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் குக்கி இன மக்களே வசிப்பதால் அவர்களே தாக்குதல் நடத்தியிருக்ககூடும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் இருந்து ராக்கெட்டுகள் மற்றும் ஆயுதங்கள் பெறப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் , மைத்தேயி – குக்கி சமூகத்தினர் இடையிலான வன்முறையால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.. ஏறத்தாழ பல்லாயிர கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்​பெயர்ந்​தனர். மேலும் , மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை.. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி கிராமத்தில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவரின் இரண்டு குழந்தைகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். இது இந்த பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து மைதேயி அமைப்புகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் 5 நாள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நேற்று இரண்டாவது நாளாகக் கடைகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் முற்றிலும் முடங்கின.

மணிப்பூரில் உள்ள மூன்று முக்கிய இனக்குழுக்களும் தனித்தனியாகப் போராட்டங்களை அறிவித்துள்ளன, இது சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. நாகா சமூகத்தினர், தங்கள் சமூகத்தை சேர்ந்த 2 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டதை கண்டித்து, நேற்று நள்ளிரவு முதல் நாகா பகுதிகளில் 3 நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இம்பால் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடி நடத்தப்பட்டதில் பெண்கள் உட்படப் பலர் காயமடைந்துள்ளனர்.

முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங், கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். போராட்டத்தை முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கைகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *